வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2019 (21:04 IST)

வரதட்சனை கேட்டு மனைவி பட்டினி போட்டு கொலை வழக்கில் விசாரணை!

கேரளாவில் வரதட்சனை தராததால் பட்டினி போட்டு மனைவியைக் கொன்றதாக குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
கொல்லத்தில் ரூ.2லட்சம் ரூபாய் வரதட்சனை கொடுக்காததால் 27 வயதான் இளம்பெண்ணுக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அப்பெண்ணின் கணவர், மாமியார், ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
 
மேலும் அப்பெண் மாந்திரீகம் சம்பந்தமான நடவடிக்கையில் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.அதுமட்டுமின்றி சுமார் 60 கிலோ எடை இருந்த பெண்ணின் எடை இறக்கும் போது 20 கிலோ எடைதான் இருந்தார்.இந்தச் செய்தி  பத்திரிக்கைகளில் வெளியானது. 
 
இந்நிலையில் இது பற்றி தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.