1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (08:18 IST)

பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? மத்திய அரசு வட்டார தகவல்

பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?
நாடு முழுவதும் மார்ச் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 21ஆம் தேதி முடிவுக்கு வந்தாலும் இந்த ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ஒருவேளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் உடனடியாக திறக்க வாய்ப்பில்லை என்றே மத்திய அரசின் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன. குறைந்தபட்சம் மே 15ஆம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மத்திய அரசு உத்தரவிட வாய்ப்பு இருப்பதாகவும், அதேபோல் மத சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கும், கூட்டங்களுக்கும் மே மாதம் இறுதி வரை தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வேறு எந்த பிரச்னையும் இருக்காது என்றும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வு எழுதாமலேயே பாஸ் செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ஜூன் மாதம் பள்ளி திறந்தால் போதும் என்ற அறிவுறுத்தலையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவு நீட்டிக்காவிட்டாலும் வழக்கம் போல் ஜூன் மாதம்தான் பள்ளி, கல்லூரிகள் திறக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இருப்பினும் கல்லூரி மாணவர்களை செமஸ்டர் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்லூரிகள் திறந்தவுடன் செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது