வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2022 (14:54 IST)

முடங்கியிருந்த வாட்ஸ் ஆப் சேவை சீரானது....பயனர்கள் மகிழ்ச்சி

உலகம் முழுவதும்  முடங்கியிருந்த வாட்ஸ் ஆப் சேவை சீராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களின் தகவல் தொடர்புக்கு பெரிதும் சார்ந்திருப்பதும் பயன்படுத்தி வருவது வாட்ஸ் ஆப் என்ற செயலிதான். பல கோடிப் பயனர்கள் இதைப் பயன்படுத்தி வரும் நிலையில், உரையாடல், பணம் அனுப்புதல், தகவல் அனுப்புதல் என அனைத்து வகையிலும் இது பயனுள்ளதாக உள்ளது.

இந்த நிலையில், இன்று திடீரென்று வாட்ஸ் ஆப் சேவை முடங்கியதால், இதன் பயனர்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், இந்த கோளாறு விரைவில் சரிசெய்யப்படும் எனவும், மீண்டும் வாட்ஸப் பழையபடி வேலை செய்யும் என்றும் கூறியுள்ள மெட்டா நிறுவனம், பயனாளர்களின் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்தது.

அதன்படி, சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து, முடங்கியிருந்த வாட்ஸ் ஆப் சேவை சீராகியுள்ளது. இந்தியாவில், டெல்லி, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் வாட்ஸ் ஆப் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj