1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 29 ஜூன் 2016 (16:06 IST)

வாட்ஸ்அப்புக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

வாட்ஸ்அப்பை தடை விதிக்க கோரிய பொது நல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வாட்ஸ்அப்பிற்கு தடை விதிக்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது.


 

 
உலக அளவில் பிரபலமான சமுக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் அண்மையில் என்கிரிப்ஷன் என்னும் பாதுகாப்பு அம்சத்தை புதிதாக அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் தகவல் பறிமாற்றம் இருவருக்கு இடையே பாதுகாப்பாக இருக்கும். மூன்றாம் தரப்பினர் யாரும் பார்க்க முடியாது. 
 
இந்த பாதுகாப்பு அம்சம் தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் இருக்கிறதாக குறிப்பிட்டு வாட்ஸ்அப்புக்கு தடை விதிக்க கோரி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் சுதிர் யாதவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். 
 
தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வாட்ஸ்அப்பிற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.