வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 12 ஜூன் 2019 (07:37 IST)

மினி பாகிஸ்தானாக மாறி வருகிறது மேற்குவங்கம்: நிதிஷ்குமார் கட்சி பிரமுகர் குற்றச்சாட்டு

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அம்மாநிலம் மினி பாகிஸ்தானாக மாறி வருகிறது என பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் அலோக் தெரிவித்துள்ளார்.
 
டெல்லி, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய நான்கு மாநில தேர்தலில் ஐக்கிய ஜனதா தள கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சமீபத்தில் அறிவித்தார். நிதிஷ்குமாரின் இந்த முடிவை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார்.
 
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் அலோக், எங்கள் கட்சியின் முடிவை மம்தா ஏன் வரவேற்றார் என்பது தெரியவில்லை. ஆனால் அவரது மாநிலம் மினி பாகிஸ்தானாக மாறி வருவதை அவர் கவனிக்க தவறி வருகிறார். மேற்குவங்கத்தில் வசிக்கும் பீகார் மக்கள் தாக்கப்பட்டதையும், அவர்கள் வெளியேற்றப்பட்டதையும் எங்களால் மறக்க முடியாது. அவருடைய கட்சியுடன் ஒருபோதும் ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டணி வைக்காது' என்று கூறியுள்ளார்.