ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bala
Last Updated : வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (18:33 IST)

தென் இந்தியர்கள் நிறம் குறித்து தரக்குறைவான கருத்து: தருண் விஜய்க்கு குவியும் கண்டனங்கள்

நிறம் குறித்து பாஜக தலைவர் தருண் விஜய் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

நொய்டாவில் போதைப் பொருள் பயன்படுத்திய சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து போதைப் பொருள் விற்பனை செய்வதாக கூறி ஆப்பிரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை கண்டித்த ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் தரப்பில் இனவெறி தாக்குதல் என கூறப்பட்டது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

இவ்விவகாரம் தொடர்பாக அல்-ஜசீரா தொலைக்காட்சி நடத்திய விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக தலைவர் தருண் விஜய் கலந்துக் கொண்டு பேசினார். அவர் பேசியபோது,

ஒட்டுமொத்த தென் இந்தியாவை பற்றி உங்களுக்கு தெரியும். அங்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளது. அங்கு கறுப்பு நிறத்தவர்கள் தான் அதிகம் உள்ளனர். நாங்கள் இனவெறி பிடித்தவர்களாக இருந்திருந்தால், நாங்கள் ஏன் தென் இந்திய கருப்பர்களுடன் சேர்ந்து வாழ முடியுமா என்பதை யோசியுங்கள் என்று கூறினார். தருண் விஜயின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததுள்ளது.

இதையடுத்து தனது கருத்து குறித்து டுவிட்டரில் தருண் விஜய் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர்  அப்போது தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பும் தெரிவித்து உள்ளார். என்னுடைய கருத்தை மீறி நான் மாறுபாடுடன் பேசியதாக உணர்கின்றவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன் என கூறி உள்ளார்.