வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (13:39 IST)

வயநாடு நிலச்சரிவு.. 4 நாட்களுக்கு பின் 4 பேர் உயிருடன் மீட்பு..!

Wayanad Landslide
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 4 நாட்களுக்கு பின் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை ராணுவத்தின் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். வடவெட்டி குன்று அருகே 2 பெண்களும், 2 ஆண்களும் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் ராணுவத்தினர் அழைத்து சென்றனர். தற்போது நால்வரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
வடவெட்டி குன்று பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீடுகள் அடித்து செல்லப்பட்டதாகவும், சகதிகள் முழுவதும் மூடி இருந்தாலும் சுவாசிக்கும் அளவிற்கு காற்று இருந்ததால் 4 பேர் உயிர் பிழைத்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
வடவெட்டி குன்று பகுதியில் தொடர்ந்து மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வரும் நிலையில் இன்னும் சிலர் மீட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran