1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (18:16 IST)

விஜய் மல்லையா தனது வெளிநாட்டு சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாடுகளில் உள்ள தனது சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 


தொழிலதிபரும் டெல்லி மேலவை உறுப்பினருமான விஜய் மல்லையா, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்றார்.
 
இதைத் தொடர்ந்து, மும்பை அமலாக்கத்துறை அவர் நேரில் ஆஜராகும்படி, 3 முறை சம்மன் அனுப்பியது.  சென்றுவிட்ட அவர் ஆஜராகவில்லை.
 
இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை மும்பை தனிநீதிமன்றம் பிறப்பித்தது.
 
அத்துடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அனுப்பிய நோட்டீசுக்கும் அவர் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால், அவருடைய பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்குவதாக அறிவித்தது.
 
முன்னதாக, விஜய் மல்லையா மீது வங்கிக் கூட்டமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
 
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விஜய் மல்லையா வெளிநாட்டில் உள்ள தனது சொத்து விவரங்களை வங்கிகளுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 
மேலும், விஜய் மல்லையா, தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயரில் வாங்கியுள்ள சொத்துக்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
 
அத்துடன், விஜய் மல்லையா மீதான வழக்கை 2 மாதங்களில்  முடிவுக்கவும் கடனைத் திரும்பப் பெறும் தீர்ப்பாயத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.