வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (16:43 IST)

ஆபாசப்படம் பார்த்தால் எச்சரிக்கை எஸ்.எம்.எஸ்! – உத்தரபிரதேசம் அதிரடி!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் ஆபாச படம் பார்த்தலை தவிர்க்க உத்தரபிரதேசம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்து வரும் நிலையில் இதற்கு ஆபாச படங்கள் பார்ப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் இந்தியா முழுவதும் பல்வேறு ஆபாச பட தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், மறைமுகமாக சிலர் தொடர்ந்து ஆபாச படங்களை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேச அரசு புதிய வழிமுறையை கையாள உள்ளது. அதன்படி ஆபாச வலைதளங்களில் யாராவது படங்கள் பார்த்தால் அவர்களது எண்ணுக்கு உத்தர பிரதேச காவல் கண்காணிப்பு அலுவலகம் வாயிலாக எச்சரிக்கை எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். அதற்கு பிறகும் தொடர்ந்து ஆபாச தளங்களை பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.