பலாத்காரம் செய்ய ஒத்துழைக்காததால் இளம்பெண்ணை தீ வைத்து கொன்ற கொடூரம்!
பலாத்காரம் செய்ய ஒத்துழைக்காததால் இளம்பெண்ணை தீ வைத்து கொன்ற கொடூரம்!
உத்தர பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அந்த பெண் அதற்கு ஒத்துழைக்காமல் கூச்சலிட்டதால் அந்த நபர் இளைம்பெண்ணை தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஷாஹிகணேஷ்பூர் பகுதியில் 18 வயதான் இளம்பெண் வீட்டில் தனியாக இருப்பதை கவனித்த அந்த பகுதியில் உள்ள இளைஞன் பலாத்காரம் செய்யும் திட்டத்துடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று செல்ஃபோன் சார்ஜ் செய்து தர முடியுமா என கேட்டுள்ளான்.
இதனை நம்பி அந்த பெண் செல்ஃபோனை வாங்கிக்கொண்டு சார்ஜ் செய்ய வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த இளைஞன் வீட்டிற்குள் நுழைந்து கதவை அடைத்துவிட்டு அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அதற்கு ஒத்துழைக்காமல் கூச்சலிட்டதால், அந்த இளைஞன் ஆத்திரத்தில் அந்த பெண் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பித்துள்ளான்.
அதன் பின்னர் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகில் உள்ளவர்கள் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அந்த பெண் சிகிச்சை பலனில்லாமல் உயிழந்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.