1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2017 (02:31 IST)

உபியில் பிச்சை எடுத்த நெல்லையை சேர்ந்த கோடீஸ்வரர்

உத்தரபிரதேச மாவட்டத்தில் முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து கொண்டு திரிந்துள்ளார். அவருக்கு சிலர் பரிதாபப்பட்டு உணவு அளித்தனர். கிடைத்த உணவை சாப்பிட்டுவிட்டு கிடைத்த இடத்தில் தங்கி பொழுதை கழித்தார். அவருக்கு அடிக்கடி நினைவு தப்பும் வியாதியும் இருந்ததால் அவர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது

இந்த நிலையில் உபியில் ஆஸ்ரமம் நடத்தி வரும் சாமியார் ஒருவர் அவருடைய உடைமைகளை ஆராய்ந்தபோது அவருடைய ஆதார் அட்டை மற்றும் ஒரு கோடி ரூபாய்க்கான பிக்சட் டெபாசிட் பத்திரம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாமியார், அந்த முதியவர் கோடீஸ்வரர் என்பதை உறுதி செய்தார்

பின்னர் ஆதார் அட்டையில் உள்ள முகவரிக்கு தொடர்பு கொண்டு செய்தியை தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அந்த முதியவரின் குடும்பத்தினர் அவரை அழைத்து செல்ல உபி விரைந்தனர்

இதுகுறித்து முதியவரின் மகள் கீதா கூறுகையில், 'அவர் எனது தந்தை முத்தையா. நாங்கள் ''ரயில் பயணம் மேற்கொண்டபோது எங்கள் தந்தை தொலைந்துவிட்டார். கடந்த ஆறு மாதங்களாக அவரைத் தேடி வந்தோம். வயது முதிர்வு காரணமாக  அடிக்கடி சுய நினைவு தப்பிவிடுகிறது'' என்றார். மேலும், தந்தையை மீட்டுக் கொடுத்ததற்காகப் பாஸ்கர் சாமியாருக்கும் கீதா நன்றி தெரிவித்தார்.