உக்ரைனில் சுடப்பட்ட இந்தியர் நாடு திரும்புகிறார்..! – அமைச்சர் தகவல்!
உக்ரைனிலிருந்து தப்பிக்க முயன்றபோது சுடப்பட்ட இந்திய மாணவர் நாடு திரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா போரை தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து உக்ரைன் சென்று படித்து வந்த மாணவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து ஆபரேஷன் கங்கா சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்னதாக உக்ரைன் எல்லைக்கு காரில் தப்பி சென்ற டெல்லியை சேர்ந்த மாணவர் ஹர்ஜோத் சிங் துப்பாக்கி சூட்டில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் உக்ரைனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
தற்போது ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ் ஹர்ஜோத் சிங் இன்று மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட உள்ளார். இந்த தகவலை மத்திய அமைச்சர் வி.கே.சிங் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.