மோடியிடம் மன்னிப்பு கேட்டாரா உத்தவ் தாக்கரே? ஏக்நாத் ஷிண்டே கூறிய அதிர்ச்சி தகவல்..!
பிரதமர் மோடியிடம் உத்தவ் தாக்கரே மன்னிப்பு கேட்டதாகவும், மீண்டும் ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்ததாகவும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, டெல்லிக்கு சென்ற உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியிடம் தன்னை விசாரணை அமைப்புகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டதாகவும், மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்ததாகவும் பேசினார்.
ஆனால், டெல்லியில் இருந்து மகாராஷ்டிராவுக்கு திரும்பிய பிறகு, தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும், ஆட்சி அதிகாரத்திற்காக உதவ, சத்ரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைகளை மறந்து, அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை பின்பற்றிக் கொண்டு காங்கிரசுடன் சேர்ந்ததாகவும் அவர் கூறினார்.
சிவசேனா, காங்கிரஸ் கட்சியிடம் கொடுத்த வில் அம்பை நாங்களே வீரத்துடன் மீட்டெடுத்தோம் என்றும், சிவாஜியை பற்றி பேச உத்தவ் தாக்கரேவுக்கு அருகதை இல்லை என்றும் கூறினார். ஏனெனில், அவர்கள் அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை ஏற்றவர்கள் என அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவின் இந்த பேச்சு சட்டமன்றத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Edited by Siva