வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 18 ஜூன் 2016 (18:56 IST)

கல்லூரி பெண் ஆசிரியர் மீது ஆசிட் வீச்சு

கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த பெண் ஆசிரியை மீது இரு இளைஞர்கள் ஆசிட் வீசிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியரின் பெயர் ஷலஜா நம்தியோ (24). அவர், தான் வசித்து வரும் போஷ் அரீரா காலணியில் என்ற பகுதியில் இருந்து, தான் பணி புரியும் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்கள் அவர் மீது ஆசிட்டை வீசினர்.
 
இதில் அவரது கை, இடுப்பு ஆகிய பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டது.  ஆசிட் வீசிய இளைஞர்கள் உடலில் பர்தா அணிந்திருந்தனர். எனவே அவர்கள் ஆணா பெண்ணா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
 
ஆசிட் வீச்சில் காயமடைந்த பெண், ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.