திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 1 ஜூலை 2022 (21:52 IST)

ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு மேலும் 2 கட்சிகள் ஆதரவு!

draupathi
இந்திய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. 
 
இந்த தேர்தலில் பாஜக கூட்டணியின் சார்பில் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். அதேபோல் எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரு ஜனாதிபதி வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளிடம் தீவிர வாக்குகளை சேகரித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு அவர்களுக்கு சிரோன்மணி அகாலிதளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது 
 
சீக்கிய மக்களுக்கு எதிராக கொடுமைகள் இழைத்த காங்கிரஸ் கட்சிக்கு ஒருபோதும் ஆதரவு இல்லை என அக்கட்சி தெரிவித்துள்ளது 
 
அதேபோல் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா திரெளபதி முர்மு அவர்களுக்கு ஆதரவு அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது