வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (19:43 IST)

மகாரஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே 8 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து விட்டது என்பதும் பெங்களூர் குஜராத் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பரவிய ஒமிக்ரான் வைரஸ் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 17 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியது என்பதும் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 8 பேருக்கு ஒமிக்ரான் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மும்பையில் இன்று மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் பத்து பேருக்கும் இதனால் வைரஸ் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.