செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 31 மே 2024 (11:15 IST)

பிரஜ்வால் ரேவண்ணா மீது மேலும் 2 வழக்கு.. காவலில் எடுக்கவும் போலீசார் திட்டம்..!

Prajwal Revanna
ஆபாச வீடியோ புகாரில் சிக்கிய கர்நாடக எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு விசாரணைக்குழு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
நேற்று இரவு பெங்களூரு வந்த பிரஜ்வால் ரேவண்ணா விமான நிலையத்தில் வைத்தே சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு சற்று நேரத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட இருப்பதாக தெரிகிறது.
 
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் காவல் கிடைக்கும் பட்சத்தில் பிரஜ்வால் ரேவண்ணாவை ஹாசனில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் தான் பிரஜ்வால் ரேவண்ணா லும் இரண்டு வழக்குகளில் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்குகள் குறித்த விவரங்கள் இன்னும் சில நிமிடங்களில் தெரியும் என்றும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து வழக்குகளில் பிரஜ்வால் ரேவண்ணா கைது செய்யப்பட்டு வரும் நிலையில் அவர் இப்போதைக்கு வெளியே வர வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran