திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 மே 2021 (11:50 IST)

இந்திய பழங்குடி பெண்களை கொன்றாரா பில்கேட்ஸ்!? – கைது செய்ய சொல்லி ட்ரெண்டிங்!

இந்திய பழங்குடி பெண்களை முறையற்ற மருத்துவ பரிசோதனைகளை செய்து தொழிலதிபர் பில்கேட்ஸ் கொன்றதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக செல்வந்தர்களில் முக்கியமானவரான பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாக தலைவரும் ஆவார். இவரது நிறுவனம் நிதியளித்ததின் பேரில் ஆந்திராவில் உள்ள கம்மம் மாவட்டத்தில் உள்ள பழங்குடி பெண்கள் மீது முறையற்ற மறைமுகமாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் ஏராளமான பெண்கள் இறந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

இந்நிலையில் பில்கேட்ஸை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சமூக வலைதளங்களில் #ArrestBillGates என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.