1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (18:23 IST)

நாடாளுமன்றத்தில் பச்சையாக கத்தரிக்காயை சாப்பிட்ட பெண் எம்பி: காரணம் என்ன?

mp brinjal
நாடாளுமன்றத்தில் பச்சையாக கத்தரிக்காயை சாப்பிட்ட பெண் எம்பி: காரணம் என்ன?
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஒருவர் கத்தரிக்காயை பச்சையாக சாப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நாடாளுமன்றத்தில் இன்று விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தின்போது திரிணாமுல் கட்சி எம்பி ககோலி கோஷ் என்றவர் சிலிண்டர் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளதாக இனிமேல் காய்கறிகளை சமைத்து சாப்பிட முடியாது என்றும் பச்சை காய்கறிகளை தான் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார்
 
இதனையடுத்து அவர் உடனே தன் கையோடு எடுத்து வந்த கத்திரிக்காயை எடுத்து பச்சையாக கடித்தும் காட்டினார்
 
சிலிண்டர் விலை ஆயிரத்து 100 ரூபாய் விற்றால் எப்படி மக்கள் அதற்கு செலவு செய்ய முடியும் என்றும் கடந்த சில மாதங்களில் நான்கு மடங்கு விலை உயர்ந்து உள்ளதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் பச்சை கத்தரிக்காயை எம்பி ஒருவர் கடித்து காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது