பாஜகவினரை கிருமி நாசினி தெளித்து கட்சியில் சேர்த்துகொண்ட திருணாமூல் காங்கிரஸ்!
திருணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர வந்த பாஜகவினரை கிருமி நாசினி தெளித்து சேர்த்துக்கொண்டுள்ளனர்.
தேர்தல் சமயத்தில் பல திருணாமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர்களை பாஜக தன் பக்கம் இழுத்தது. ஆனால் தேர்தல் தோல்விக்கு பின் பலரும் திருணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அப்படி மேற்குவங்கத்தில் இளம்பசார் பகுதியில் பாஜகவில் இருந்து விலகி திரிணமூல் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. அப்போது பாஜகவில் இருந்து திருணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு சேர வந்தவர்களை கிருமி நாசினி தெளித்து கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளனர்.