வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 15 மே 2022 (07:50 IST)

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

NEET
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
 
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை கடந்த சில ஆண்டுகளாக இருந்துவரும் நிலையில் நீட்தேர்வு தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது 
 
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
 
நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது