1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (19:56 IST)

ஆந்திராவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திர மாநிலத்தில் இன்று 1,115 பேருக்கு கொரொனா தொற்று தாக்கியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,265 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 19 என்றும் ஆந்திர மாநில சுகாதாரத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இதுவரை ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 19,85,566 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை என்றும் 13,857 அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இன்றைய நிலவரப்படி ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 14,693 என்றும் ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.