வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (13:19 IST)

பிரபல நடிகைக்கு விமானத்தில் பாலியல் தொல்லை

மும்பை தொலைக்காட்சிகளைல் ஏராளமான தொடர்களில் நடித்து வருபவர் டீனா தத்தா. இவர் மும்பையிலிருந்து ஜெட் ஏர்வேஸ் மூலம் ராஜ்கோட் சென்றுள்ளார். அவரின் மேனேஜரும் அவருடன் சென்றிருந்தார்.


 

 
அப்போது அவருக்கு பின்னால் அமர்ந்து இருந்தவர், அவரை கண்ட இடத்தில் தொட்டுள்ளார். அவர் பெயர் ராஜேஷ் என்று கூறப்படுகிறது.
 
இதனால் அதிர்ச்சியடைந்த டீனா விமானத்தில் இருந்த பணிப்பெண்ணிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவெல்லாம் சகஜம் என மிக இயல்பாக அந்த பணிப்பெண் கூறியுள்ளார். இதனால் டீனா விமான கேப்டனின் இதுபற்றி கூறியுள்ளார்.
 
ஆனால் அவரோ, விமானம் டேக் ஆப் ஆனால்தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு பொறுப்பு என கூறியுள்ளார். 
 
இந்த விவகாரத்தை  பகிர்ந்துள்ள டீனா தத்தா “ நான் உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளேன். ஆனால், இது போல் ஒரு கொடுமை எங்கும் நடக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.