3 காலிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு..!
பஞ்சாப் மாநிலத்தில் மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காலிஸ்தான் ஜிந்தாபாத் தடை பாகிஸ்தான் நிதி உதவியுடன் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் பஞ்சாப் எல்லை பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் மீது வெடிகுண்டுகளை வீசிய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்ட நிலையில் அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் உத்தரப் பிரதேசம் மாநில எல்லையில் உள்ள காவல் நிலைய பகுதியில், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் இணைந்து காலிஸ்தான் தீவிரவாதிகளை தேடும் பணியில் இருந்த போது, காவலர்களை தாக்கிவிட்டு மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் தப்பிச்சென்றனர்.
அப்போது, போலீசார் என்கவுண்டர் செய்ததில், அவர்களுக்கு குண்டடிப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கிகள், மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மூன்று பேர்களின் பெயர் மற்றும் அடையாளம் கண்டறியப்பட்டதாகவும், மூன்று பேரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
Edited by Mahendran