வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 செப்டம்பர் 2018 (19:22 IST)

இந்தியாவின் 3 முக்கிய வங்கிகள் இணைப்பு!

இந்திய வங்கிகள் அவ்வப்போது பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவின் மூன்று முக்கிய வங்கிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த இணைப்புக்கு பின் இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கி என்ற பெருமையை இந்த இணைப்பு வங்கி பெற்றுள்ளது.

விஜயா வங்கி, தேனா வங்கி ,பேங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வங்கிகளை இணைக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மூன்று வங்கிகளை இணைப்பதன் மூலம் நாட்டின் 3ஆவது பெரிய வங்கியாக இது இருக்கும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே எஸ்பிஐ துணை வங்கிகள் சமீபத்தில் இணைக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி இணைப்பு நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.