ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2023 (21:01 IST)

சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எப்போதும் எதிர்ப்பு இருக்கும்- முதல்வர் பினராயி விஜயன்

கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.
 

இங்கு மக்களுக்கு தேவையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இரண்டாம் முறையாக பினராயி விஜய் தலைமயிலான ஆட்சி நடந்து வரும் நிலையில்,  சாதி, மறுப்பு திருமணங்களுக்கு பலரும் எதிர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன்,   சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எப்போதும் எதிர்ப்பு இருக்கும். திருமணம் செய்ய வேண்டும் என இருவரும் முடிவெடுத்துவிட்டால்  அதை யாரலும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  மத மறுப்பு சி.பி.எம் கட்சி ஊக்குவித்து இஸ்லாமிய பெண்களின் அடையாளத்தை அழிக்கிறது என அம்மாநிலத்தைச் சேர்ந்த சன்னி பிரிவு இஸ்லாமிய அமைப்பு குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.