திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (23:55 IST)

அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் கர்நாடக மாநிலம்!

வகுப்பில் வைத்து மது அருந்திய ஆசிரியை பள்ளிக்கல்வித்துறை பணி இடை நீக்கம் செய்துள்ளது.

கர்நாடக  மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக  அட்சி நடந்து வருகிறது.  அங்கு சில மாதங்களுக்கு முன் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என அரசு தெரிவித்த நிலையில், உயர் நீதிமன்றமும் இதை உறுதி செய்து தீர்ப்பளிதித நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு அரசுப் பேருந்து ஓட்டு நர் பயணியை மார்பில் எட்டி மிதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று கர் நாடக மா நிலத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில்  பணியாற்றி வரும் ஆசிரியை கங்கா லெட்சுமால் என்பவர், வகுப்பில் மாணவர்களுக்குப்   மதுபோதையில்  பாடம் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர் எப்போதும் மதுபோதையில் தான் வகுப்புக்கு வந்து பிற ஆசிரியர்களுடன் சண்டை போடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  அவர் இன்று போதையில் பாடம்  நடத்தும்போது, அந்த ஊர் மக்கள் வகுப்பிற்கு வந்து அவரைப் பிடித்து விட்டனர். அதன்பின், பள்ளிக்குப் பூட்டு போடு போராட்டமும் நடத்தினர், ஆசிரியரின் மேசைப் பெட்டியில் இருந்து மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.