புதிய வங்கி தொடங்க...ரூ. 1000 கோடி முதலீடு நிர்ணயித்துள்ள ரிசர்வ் வங்கி
புதிய வங்கிகளுக்கு உரிமம் பெற குறைந்தபட்சம் ரூ.1000 கோடியை முதலீடாக நிர்ணயித்துள்ளது ரிசர்வ் வங்கி.
இந்தியாவில் தனியார், மற்றும் அரசு வங்கிகள் இயங்கி வருகின்றன. இதில் கடந்த வருடம் முக்கியமான பொதுத்துறை வங்கிகள் நிர்வாக வசதிகளுக்கான இணைக்கப்பட்டன.
இந்நிலையில் சமீபத்தில் லட்சுமி விலாஸ் வங்கியில் அதிகபட்சமான நிதி எடுத்ததால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் டிசம்பர் வரை குறிப்பிட்ட அளவு மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களின் பணத்திற்கு எந்த பாதிப்பும் இல்லையெனக் கூறியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் புதிதாக தொடங்கப்படும் உலளாவிய வங்கியின் முதலீடு என்பது ரூ.500 கோடியில் இருந்து ரூ. 1000 கோடியாக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.
மேலும், சிறுநிதி வங்கிகளின் குறைந்தபட்ச முதலீடு ரூ.200 கோடியில் இருந்து ரூ.300 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.