செய்தியாளரை சரமாரியாக தாக்கும் போலீஸ்: பரவலாகும் வீடியோ
உத்திரபிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள திமன்புரா என்ற பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதுகுறித்து தகவல் சேகரிப்பதற்காக உள்ளூரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸார் ஒருவர் அவரிடம் தகராறு செய்ததுடன் அவரைத் தாக்கும், வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவிவருகிறது.
மேலும் இதுகுறித்து அமித் சர்மா தெரிவித்ததாவது :
அங்கு நின்றிருந்தவர்களிடம் விபத்து குறித்து விளக்கம் கேட்டேன். அவர்கள் போலீஸ் உடையில் இல்லாததால் அவர்கள் ரயில்வே போலீஸ் என்று எனக்குத் தெரியவில்லை. போலிஸாரில் ஒருவர் என்னைத் தாக்கிவிட்டார். கேமராவையும் தள்ளிவிட்டார். இதுகுறித்து கேட்கையில் அவர் என்னை அடித்தார்.
அத்துடன் ரயில்வே காவல்நிலையத்திற்கு என்னை அழைத்துசென்று ஒருநாள் முழுக்க என்னை வைத்திருந்தனர். பின்னர் இதுகுறித்து ஊடகத்தினருக்குத் தெரிந்ததும் அவர்கள் வந்து போராட்டம், நடத்தியதால் என்னை விடுவித்தனர் இவ்வாறு தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர் தாக்கப்பட்ட விஷயம் காட்டுத்தீபோல் அங்கு பரவியதால் ரயில்வே போலீஸார் ராஜேஷ்குமார், சஞ்சய் ஆகியோர் தற்காலிய பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது.