பற்றி எரிந்த காரில் மனைவியை விட்டு ஓடிய கணவன்! – ராஜஸ்தானில் கோர சம்பவம்!
ராஜஸ்தான் மாவட்டத்தில் காரில் ஏற்பட்ட திடீர் தீ காரணமாக கணவன் தப்பி ஓடிவிட மனைவி பரிதாபமாக பற்றி எரிந்து பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக் படேல். இவரது மனைவி பரமேஸ்வரி படேல். இவர்கள் இருவரும் பாலி மாவட்டம் செண்டா கிராமத்திற்கு அருகே உள்ள அஜானி மாதா கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்றுக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது திடீரென காரின் பின்பக்க தீப்பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடம் விரைந்தபோது கார் முழுவதுமாக எரிந்திருந்த நிலையில் காரின் பின் இருக்கையில் பாதி எரிந்த நிலையில் பரமேஸ்வரி படேலின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கார் பற்றி எரியவும் காரை ஓட்டி வந்த அசோக் படேல் காரிலிருந்து குதித்து வெளியேறிய நிலையில் மனைவி மட்டும் தீயில் கருகி பலியானதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
பரமேஸ்வரி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீஸார் கார் பற்றி எரிந்தது எப்படி என நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விபத்தில் தப்பியதாக சொன்ன கணவர் அசோக் படேலிடமும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Edit by Prasanth.K