1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (09:28 IST)

பாஜகவினர் என்னிடம் பேரம் பேசவே இல்லை - போட்டுடைத்த கர்நாடக எம்.எல்.ஏ

கர்நாடக தேர்தலில் பாஜகவினர் என்னிடம் பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ டேப் போலி என காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷிவராம் ஹெப்பர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு 116 இடங்கள் இருந்தும், 104 இடங்கள் பெற்ற  பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர் வாஜூபாய்வாலா. மேலும், மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார்.  இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது காங்கிரஸ்-மஜத தரப்பு. நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
கர்நாடக தேர்தலில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பை கோராமலேயே எடியூரப்பா பதவி விலகினார். இதையடுத்து கர்நாடக முதலமைச்சராக நாளை பதவியேற்க உள்ளார் குமாரசாமி.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் எடியூரப்பா, மற்றும் பாஜக அமைச்சர்கள் சிலர் குதிரை பேரம் பேசியதாக காங்கிரஸ் தரப்பில் ஆடியோ  வெளியிடப்பட்டது.
 
இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பர், பாஜகவை சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி  என்னிடம் பேரம் பேசியதாக, காங்கிரஸ் வெளியிட்ட ஆடியோ டேப் போலியானது என தெரிவித்துள்ளார்.

தன்னையும், தனது மனைவியையும் பாஜகவினர் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அந்த ஆடியோவில் பேசிய பெண்ணின் குரல் என் மனைவியின் குரல் அல்ல எனத் தெரிவித்துள்ளார் ஷிவராம் ஹெப்பர். அமைச்சரின் இந்த தகவல் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.