செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 26 அக்டோபர் 2022 (22:23 IST)

''பயங்கரவாதம் வேரறுக்கப்படவேண்டும்''- திருமாவளவன் ட்வீட்

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட  முதல்வர்      ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.  இதற்கு திருமாவளன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்ததால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து இதுகுறித்து 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள்  கடும் விமர்சனம் செய்து வரும் நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருப்பது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இன்று, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்,தமிழக அரசு, ‘’உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பானவழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட முதல்வர் பரிந்துரை செய்தவதாக அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதை பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ள நிலையில், தற்போது திருமாவளனும் வரவேற்றுள்ளார். இதுகுறித்து, அவர், கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு இருக்கலாமெனும் பேரச்சம் எழுந்துள்ள நிலையில் அதனை தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணைக்குப் பரிந்துரைக்க மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் முன்வந்திருப்பதை விசிக வரவேற்கிறது.பயங்கரவாதம் வேரறுக்கப்படவேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj