புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (21:33 IST)

ஏப்ரல் 1 முதல் இணைப்பு: எந்தெந்த வங்கிகள் எந்தெந்த வங்கியுடன் இணைப்பு தெரியுமா?

ஏப்ரல் 1 முதல் இணைப்பு
பொதுத்துறையை சேர்ந்த 10 வங்கிகளை பிற வங்கிகளுடன் இணைக்கும் முயற்சியில் பாஜக அரசு கடந்த சில மாதங்களாக இருந்த நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனை அடுத்து வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 10 வங்கிகள் பிற வங்கிகளுடன் இணைகிறது. இதன்படி எந்தெந்த வங்கிகள் எந்தெந்த வங்கியுடன் இணைகிறது என்பதை பார்ப்போம் 
 
யுனைடெட் வங்கி, ஓரியண்டல் வங்கி ஆகிய வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும் அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்ரேஷன் வங்கி யுனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் வங்கிகள் சட்டத்தில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்