வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2020 (12:25 IST)

தற்கொலையை தடுக்க இலவசமாக மது சப்ளை செய்த தன்னார்வலர் கைது

தற்கொலையை தடுக்க இலவசமாக மது சப்ளை செய்த தன்னார்வலர் கைது
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மூன்று வாரங்களாக நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மதுவுக்கு அடிமையான பலர் திண்டாட்டத்தில் உள்ளனர். சாப்பாடு கூட இல்லாமல் இருந்துவிடுவோம், மது அருந்தாமல் இருக்க முடியாது என்று கூறிய பலரில் ஒரு சிலர் மது கிடைக்காமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக மது குடிக்க முடியாமல் திண்டாடிய மது பிரியர்களுக்கு தெலுங்கானாவை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் இலவசமாக மது வழங்கியுள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த  குமார் என்பவர் ஊரடங்கிற்கு முன்னதாகவே மொத்தமாக வாங்கி வைத்த மதுபாட்டில்களை குடிமகன்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தார்
 
கடந்த மூன்று வாரங்களாக மது கிடைக்காமல் இருந்த பலர் அவரிடம் மது வாங்கி குடித்து திருப்தி அடைந்தனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விசாரணை செய்த தெலுங்கானா போலீசார், ஊரடங்கு நேரத்தில் மது விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.