வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2017 (17:39 IST)

பள்ளியில் புளூ வேல் விளையாடிய 20 மாணவர்கள் மீட்பு; அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள்

கர்நாடக மாநிலம் பெலகாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா புளூவேல் கேம் விளையாடிய 20 மாணவர்களை ஆசியர்கள் மீட்டனர்.


 

 
கர்நாடக மாநிலம் பெலகாவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கைகளில் காயங்களை இருப்பதை ஆசிரியர்கள் கண்டதாக கூறப்படுகிறது. அவற்றை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் பள்ளி முழுவதும் அனைத்து மாணவர்களிடமும் சோதனை செய்துள்ளனர்.
 
அதில் 20 பேர் புளூ வேல் கேம் விளையாடுவது தெரிய வந்துள்ளது. அதில் 14 மாணவர்கள், 6 மாணவிகள் என மொத்தம் 20 பேர் கைகளில் கீறல்கள் இருந்துள்ளது. இதைவைத்தே அவர்கள் புளூ வேல் கேம் விளையாடுவது தெரியவந்துள்ளது. 
 
இதையடுத்து பள்ளியில் உள்ள 3000 மாணவர்களுக்கு புளூ வேல் விளையாட்டின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்னும் இந்த புளூ வேல் விளையாட்டு இந்தியாவை விட்டு வெளியேறவில்லை. உயிரை பறிக்க இன்னும் இந்தியாவில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.