1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 மே 2023 (17:38 IST)

மாணவர்கள் முன்னிலையில் குடுமிப்புடி சண்டை போட்ட பெண் ஆசிரியைகள்..!

பீகார் மாநிலத்தில் உள்ள பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் இரண்டு பெண் ஆசிரியைகள் குடுமிபிடி சண்டை போட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது 
 
பீகார் மாநிலத்தில் உள்ள பிஹ்தா என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டு பெண்ஆசிரியர்கள் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். வகுப்பறையின் ஜன்னல் கதவுகளை மூடுவது தொடர்பாக இந்த இரண்டு பெண் ஆசிரியர்களுக்கு இடையே சண்டை வந்ததாக தெரிகிறது. 
 
முதலில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அவர்கள் ஒரு கட்டத்தில் குடுமிப்புடி சண்டை போட்டனர் என்பதும் ஒருவருக்கு ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கி கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஆசிரியர்கள் இருவரும் தரையில் விழுந்து புரண்டு கட்டி புரண்டு சண்டை போட்டதால் அதை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து சண்டை போட்ட இரண்டு ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
 
Edited by Siva