செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 ஜனவரி 2023 (12:43 IST)

ஆசிரியர் தேர்வு வினாத்தாளை கசியவிட்ட பயிற்சி மையத்தின் கட்டிடம் இடிப்பு!

building
ஆசிரியர் தேர்வு வினாத்தாளை கசியவிட்ட பயிற்சி மையத்தின் கட்டிடம் இடிப்பு!
ஆசிரியர் தேர்வின் வினாத்தாளை கசியவிட்ட  பயிற்சி மையத்தின் கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஆசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ராஜஸ்தானத்தில் உள்ள பயிற்சி மையம் உடந்தையாக இருந்ததாக செய்திகள் வெளியானது
 
இந்த பயிற்சி மையத்தை நடத்தி வந்த நிர்வாகிகளுக்கு ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிந்ததில் இருந்த தொஅர்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 55 பேர் கைது செய்யப்பட்டனர். 
 
இந்த நிலையில் ஆசிரியர் பயிற்சி மையம் இருந்த ஐந்து மாடி கட்டிடம் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டதாக அறியப்பட்டதை அடுத்து புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva