1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (16:59 IST)

தாமதமாக வந்த மாணவியின் ஆடைகளை களைந்து பாலியில் தொல்லை கொடுத்த ஆசிரியர்!

தாமதமாக வந்த மாணவியின் ஆடைகளை களைந்து பாலியில் தொல்லை கொடுத்த ஆசிரியர்!

பெங்களூரில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவியின் ஆடைகளை ஆசிரியர் ஒருவர் களைந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
 
பெங்களூரில் 12 வயதான மாணவி ஒருவர் பள்ளிக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளார். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த 28 வயதான உடற் பயிற்சி ஆசிரியர் அந்த மாணவியை கண்டித்துள்ளார்.
 
மேலும் மாணவியை தனியாக அழைத்து சென்று தண்டனையாக மாணவியின் ஆடைகளை களைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவி சோர்வாக இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மாணவியின் தாய் விசாரித்ததில் மாணவி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
 
இதனை கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் தாய் பள்ளிக்கு சென்று ஆசிரியையிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அந்த ஆசிரியை மறுத்துள்ளார். இதனை ஏற்காத மாணவியின் தாய் ஆசிரியை மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து குறிப்பிட்ட பள்ளியில் விசாரணை நடத்திய போலீசார் அந்த ஆசிரியர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.