வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (15:11 IST)

மாணவிகளை நிர்வாணமாக நிற்கவைத்த ஆசிரியை: இப்படியொரு ஒரு தண்டனையா!

மாணவிகளை நிர்வாணமாக நிற்கவைத்த ஆசிரியை: இப்படியொரு ஒரு தண்டனையா!

மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவிகளை ஆசிரியை ஒருவர் நிர்வாணமாக நிற்கவைத்து தண்டனை கொடுத்த சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர் ஆங்கில பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் அவர்களை ஆசிரியை ஒருவர் மிகவும் கீழ்த்தரமாக தண்டித்துள்ளார்.
 
மதிப்பெண் குறைவாக எடுத்த அந்த குறிப்பிட்ட மாணவிகள் இருவரையும் ஆடைகளை கழற்றி விட்டு வகுப்பறையில் நிற்க வைக்கத்துள்ளார். ஆசிரியையின் இந்த தண்டனையால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளனர்.
 
இதனை கேட்டு ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அந்த பள்ளிக்கு வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஆசிரியையை பெண்களை பொது இடத்தில் அவமானப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்தனர்.