1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (21:46 IST)

ஜம்முவில் தொடங்குவார்களா தமிழக தொழிலதிபர்கள்?

ஜம்முவில் தொடங்குவார்களா தமிழக தொழிலதிபர்கள்?
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சமீபத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்டது என்பதும் 370வது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்  இந்தியாவை சேர்ந்த பிற மாநிலங்களில் உள்ளவர்கள் இடம் வாங்கலாம் என்பதும் தொழில் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொழில் தொடங்க ஏற்ற சூழ்நிலை தற்போது இருப்பதாகவும் தமிழகத் தொழிலதிபர்கள் ஜம்மு-காஷ்மீரில் தொழில் தொடங்க வேண்டும் என்று அம்மாநில அமைச்சர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் 
 
இதனையடுத்து இன்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநரின் ஆலோசகர் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது ஜம்முவில் தகவல் - தொழில் நுட்பம், விவசாயம், தோட்டக்கலை, கல்வி, சுற்றுலா மேம்பாடு, உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் துவங்க, அதிக வாய்ப்பு உள்ளதாக கேவல் குமார் ஷர்மா பட்டியலிட்டார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது