பன்றிக்கறி உண்டு போராட்டம்: நீதி கிடைக்காத சோகம்...
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இரண்டாம் கட்ட போராட்டத்தை கடந்த 39 நாளாக நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம், வங்கிகளில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவாசயிகள் போரட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தினம் ஒரு வகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 39 வது நாளான இன்று பன்றிக்கறி சாப்பிடும் போராட்டத்தை நடத்தினர்.
மேலும் ‘திங்க வச்சுட்டியே, திங்க வச்சுட்டியே, மோடியே தமிழக விவசாயிகளை பன்றிக்கறி திங்க வச்சுட்டியே’ என்று கோஷங்களும் எழுப்பினர்.
ஏற்கனவே முதல் கட்ட போராட்டத்தின் போதும் தமிழக விவாசாயிகளை மத்திய் அரசு கண்டுக்கொள்ளவில்லை. மேலும், இந்த இரண்டாம் கட்ட போராட்டத்தையாவது மதிப்பார்களா என்ற ஏக்கம் அனைவரிடம் உள்ளது.