திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (20:11 IST)

ஆதார் எண் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு!!

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்க வேண்டும் என மத்திய அரசு 12 இலக்கு அடையாள எண் கொண்ட ஆதார் அட்டையை வழங்கி வருகிறது. 




 
 
மேலும், ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கும் பணியும் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், சிம் கார்டு முறைகேடுகளை தடுக்க ஆதாருடன் செல்பேசி எண்ணை இணைக்க வேண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தி வரும் மத்திய அரசு, அதன் ஒரு பகுதியாக ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனைகளை ஆதார் எண் மூலம் மேற்கொள்ள மத்திய அரசு ஆதார் பேமண்ட் மொபைல் ஆப் வசதியை உருவாக்கி உள்ளது.
 
அதன்படி கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், இ-வாலட் இல்லாமல், கடைகளில் வாங்கிய பொருட்களுக்கு செல்பேசி மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
 
எனவே, செல்பேசி வைத்திருக்கும் அனைவரிடமும் ஆதார் எண்ணையும், கே.ஒய்.சி படிவத்தையும் ஓராண்டுக்குள் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.