1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2023 (15:31 IST)

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் பதில்..!

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு இடம் தேர்வு செய்யப்பட்டு  2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆனால் அதன் பிறகு கட்டுமான பணிகள் தொடங்க வில்லை என மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரித்த உச்ச நீதிமன்றம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்றும் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நிர்வாக ரீதியாக மத்திய அரசை தான் அணுக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மனுதாரருக்கு அறிவுறுத்தி உள்ளது.

Edited by Mahendran