புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 11 மே 2023 (17:04 IST)

ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் வித்தியாசமான தீர்ப்பு..!

eknath shinde
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ்தேவ் தாக்கரேவின் கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே பிரிந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ்தேவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென சிவ சேனா கட்சியிலிருந்து ஏக்நாத் ஷிண்டே வெளியேறினார் 
 
அவருக்கு சிவசேனாவின்  சில எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்ததை அடுத்து அவர் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். இந்த நிலையில் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. 
 
இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலையிட முடியது என்றும் இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva