வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2019 (10:14 IST)

நீதிபதி தஹில் ரமணி மேல் சிபிஐ விசாரணை – அனுமதி அளித்த உச்சநீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தஹில் ரமணிக்கு எதிராக உள்ள புகார்களை சிபிஐ விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த தஹில் ரமனியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து,கொலிஜியம் உத்தரவிட்டது. இதற்கு மறுப்புத் தெரிவித்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தனது பிரிவு உபச்சார விருந்தில் அவர் சென்னையிலேயே செட்டில் ஆகப்போவதாகக் கூறினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிலைக்கடத்தல் சம்மந்தமாக சிறப்பு அமர்வுக் கலைக்கப்பட்டது. இது ஒரு அமைச்சரைக் காக்கும் திட்டத்தோடு செய்யப்பட்டதாக சிபிஐ தரப்பு சந்தேகிக்கிறது. அதனால் அப்போது சென்னை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹீல் ரமணியை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு அவர் மேல் தொடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.