வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 7 அக்டோபர் 2017 (00:58 IST)

2 பிரதமர்களை ஆதரித்து 2 முறை தப்பு செய்துவிட்டேன். அருண்ஷோரி

பாரத பிரதமர் மோடியை இதுவரை எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமே விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் தற்போது பாஜக கட்சி தலைவர்களே அவரை விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர். ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். அவரை தொடரந்து முன்னாள் அமைச்சர் அருண்ஷோரியும் விமர்சனம் செய்தார்



 
 
இந்த நிலையில் அருண்ஷோரி இரண்டாவது முறையாக நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் மோடியை கடுமையாக விமர்சித்தார். நான் இரண்டு பிரதமர்களுக்கு ஆதரவு கொடுத்து இரண்டு முறை தவறு செய்துவிட்டேன். ஒருவர் வி.பி.சிங், இன்னொருவர் நரேந்திரமோடி என்று கூறினார்
 
மேலும் பொதுமக்கள் ஒரு தலைவர் உடனே நாட்டில் மாற்றத்தை கொண்டு வந்துவிடுவார் என்று எண்ணக்கூடாது என்றும் அது வெறும் மாயை என்றும் கூறினார்.அருண்ஷோரியின் இந்த விமர்சனம் மோடி ஆதரவாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.