செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (15:57 IST)

சன்னி லியோனை பார்க்க இப்டியா போவீங்க - வைரைல் போட்டோ

சமீபத்தில் கேரளா சென்ற பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனை பார்க்க இளைஞர் கூட்டம் ஏராளமாக திரண்ட விவகாரம்தான் சமூக வலைத்தளங்களில் இன்று அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.


 

 
அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன், அதை விட்டு விட்டு, பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தினார். ஆனாலும் அங்கும் அவருக்கு கவர்ச்சியான வேடங்களே கொடுக்கப்பட்டது. இருப்பினும் அந்த மாதிரியான படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். 
 
அந்நிலையில், கொச்சினில் ஒரு நகை கடையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றிருந்தார். அப்போது அவரை பார்க்க லட்சக்கணக்கான இளைஞர் கூட்டம் அங்கு திரண்டது. இதனால் அந்த சாலை வழியே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


 

 
ரசிகர்கள் முன் சன்னி லியோன் பேசுவதற்காக ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை கிழித்து அதினுள் தலையை மட்டும் நுழைத்த சில ஆர்வக் கோளாறு ரசிகர்கள் சன்னி லியோனை புகைப்படம் எடுக்க முயன்றனர். இந்த புகைப்படத்தை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள சன்னி லியோன் “ மற்ற புகைப்படங்களை விட இது அழகானது. இதுபற்றி நான் எழுத விரும்புகிறேன். ஆனால், எங்கு தொடங்குவது எனத் தெரியவில்லை. ரசிகர்களின் அன்பு என்னை நெகிழ வைத்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.