ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஜனவரி 2021 (16:43 IST)

ஈராக் தலைநகர் பாக்தாக்கில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாக்கில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் பலி
உலகம் முழுவதும் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் அப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலை படை தாக்குதல் நடந்திருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள புகழ்பெற்ற சந்தை ஒன்றில் சற்று முன்னர் திடீரென இரட்டை தற்கொலைப்படை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் நாலாபுறமும் பொது மக்கள் சிதறி ஓடிய நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி 20 பேர் பலியாகி இருப்பதாகவும் 40 பேர் காயமடைந்திருப்பதாகவும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
மேலும் காயமடைந்தவர்களை எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் அவர்களில் ஒரு சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாலும் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் போலீசார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பதும் இது குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும் ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன