செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 14 ஜூன் 2017 (10:43 IST)

நடிகை மீதான பாலியல் ஆசைகளை தேர்வில் எழுதிய பள்ளி மாணவன்!

நடிகை மீதான பாலியல் ஆசைகளை தேர்வில் எழுதிய பள்ளி மாணவன்!

குஜராத் மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் குமார் என்ற மாணவன் வேதியியல் பாடத்தேர்வில் தனது விடைத்தாளில் நடிகை ஒருவர் மீதான தனது பாலியல் ஆசைகளை எழுதி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஆனந்த் மாவட்டம் போர்சாத்தை பகுதியை சேர்ந்தவர் அந்த மாணவர் குமார். இவரது வேதியியல் விடைத்தாளை திருத்திய ஆசிரியர் அதிர்ச்சியடைந்துள்ளார். மாணவன் குமார் தனது விடைத்தாளில் ஆபாசமாக எழுதியது தான் ஆசிரியரின் அதிர்ச்சிக்கு காரணம்.
 
அதில் நடிகை ஒருவர் மீதான தனது பாலியல் ஆசைகளையும், தனது அண்ணி மீதான பாலியல் ஆசைகளையும் அந்த மாணவன் அதில் எழுதியிருந்துள்ளார். இதனையடுத்து அதனை படித்த அந்த ஆசிரியர் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கூறி மாணவன் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த மோசமான செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்க குஜராத் மாநில பள்ளிக்கல்வித் துறை மாணவனை நேரில் அழைத்திருந்தது. ஆனால் அந்த மாணவன் வரவில்லை. இதனையடுத்து அந்த விடைத்தாளை மாணவனின் பெற்றோரிடம் காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.