1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (20:47 IST)

பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்கு புதிய ஏற்பாடு செய்த எஸ்.பி.ஜி

பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்கு புதியதாக ஒன்றைய எஸ்.பி.ஜி எனும் சிறப்பு  அதிரடிப் படையினர் தேர்வு செய்துள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு   நரேந்திர மோடி  பாஜவின் சார்பில் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல் இந்தியா மட்டுமின்றி  வெளி நாடுக்ளுகளுக்குச் சென்றாலும் அவருக்கு உச்ச பட்ச பாதுகாப்பு அளிக்கபடுகிறது.

இந்த நிலையில் பிரதமர் பாதுகாப்புக்கு  தற்போது புதிய வரவாக சிறப்பு அதிரடிப்படையினர் சேர்த்ததுள்ளனர்.

கர்நாடாக  மாநிலத்தைச் சேர்ந்த முதோல் என்ற நாட்டு நாய்க்கு தற்போது தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி முடிந்த பின்  பிரதமர் பாதுகாப்பு படையில் இந்த 2 நாட்களும் சேர்க்கப்படும் என தகவல் வெளியாகிறது.
mudhol

இந்த வகை நாயை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.